Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 18 , பி.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
யாழ் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் தாக்கப்பட்டமை தொடர்பாக இரண்டாவது சந்தேக நபரை நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி சில்வாவின் பணிப்பின் பேரில் விசேட குழுவொன்று இச்சந்தேக நபரை கைது செய்தது.
இத்தாக்குதல் தொடர்பாக முதலாவது சந்தேக நபர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் நடந்த மோதலொன்றையடுத்து யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதலாவது சந்தேக நபர் பின்னர் களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் ஜூலை 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து இனந்தெரியாத குழுவொன்றினால் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ruban Friday, 19 August 2011 05:41 PM
அப்ப இன்னும் முக்கிய குற்றவாளி கைது செய்யப்படவில்லை?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago