2025 மே 19, திங்கட்கிழமை

கைதடி பனை ஆராய்ச்சி நிறுவனம் 20இல் திறக்கப்படவுள்ளது

Suganthini Ratnam   / 2012 ஜூலை 16 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
(எஸ்.கே.பிரசாத்)


இந்திய அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் கைதடியில் புனரமைக்கப்பட்டுள்ள பனை ஆராய்ச்சி நிறுவனம் எதிர்வரும் 20ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளதாக பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.

இத்திறப்பு விழாவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ,  பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியத் தூதுவர் ஸ்ரீகாந்தா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் சகலவிதமான புனரமைப்புப் பணிகளும்  பூர்த்தியாகியுள்ளதாகவும் தற்போது இந்நிறுவனத்திற்கு பயிலுநர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கான  பயிற்சிகள் வழங்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்.

இந்நிறுவனத்தில் தரமான பனம்பொருட்களை உற்பத்தி செய்தல், உற்பத்திப் பொருட்களை நீண்டகாலப் பாவனையில் பயன்படுத்தல், புதிய உற்பத்திகளை கண்டறிதல், உற்பத்திப் பொருட்களுக்கான தரச்சான்றிதழ் வழங்குதல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன் மூலம் உள்ளூர், வெளியூர் ஏற்றுமதி அதிகரிக்கப்படுவதுடன்,  உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு சந்தை வாய்ப்பும் அதிகரிக்குமெனவும் அவர் கூறினார்.  அத்துடன், இந்நிறுவனத்திற்கு இந்திய அரசாங்கம் பல தொழில்நுட்ப உபகரணங்களையும் 4 வாகனங்களையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிறுவனத்தின் புனரமைப்பு வேலைகள் மற்றும் உபகரணக் கொள்வனவிற்காக இந்திய அரசாங்கம் 75 மில்லியன் ரூபாவினையும் இலங்கை அரசாங்கம் 24 மில்லியன் ரூபாவினையும் வழங்கியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X