2025 மே 19, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் 214, 840 சதுர மீற்றர் நில பரப்பில் புதைக்கப்பட்ட மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன

Super User   / 2012 ஜூலை 19 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் கிளிநொச்சி 214, 840 சதுர மீற்றர் நிலப்பரப்பில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு கையளிக்கப்படவுள்ளது என யாழ். பிராந்திய மிதிவெடி செயற்பாட்டு அலுவலர் வ.முருகதாஸ் தெரிவித்தார்.

இந்த பகுதிகளில் இருந்து நான்கு லட்சத்து அறுபத்திரண்டாயிரத்தி நூற்றிப்பதினேழு மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட 6 பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. குறிப்பாக பொன்நகர், ஸ்கந்தபுரம், மலையாளபுரம், உருத்திரபுரம், செல்வாநகர் ஆகிய பகுதிகளில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 388 சதுர மீற்றர் பரப்பளவில் இதுவரை  462 ஆயிரம் மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் கோரக்கன் கட்டுப் பகுதியில் 84 ஆயிரத்து 176 சதுர மீற்றர் பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதோடு  101 மிதிவெடிகளும் மீட்கப்பட்டுள்ளது. அதேபோன்று  பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் 5 ஆயிரத்து 976 சதுர மீற்றர் பரப்பில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

அதேபோல், யாழ் மாவட்டத்தில் தெல்லிப்பழைப் பிரதேச செயலர் பிரிவில் தெல்லிப்பழை  புற்றுநோய் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள காணியில் 22 ஆயிரத்து 559 சதுர மீற்றர் பரப்பளவிலும் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் ஜே - 330 கிராம அலுவலர் பிரிவில் 54 ஆயிரத்து 411 சதுர மீற்றர் பரப்பளவில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X