2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ்.மாவட்ட உயர் தேசிய பட்டதாரிகளின் மனு விசாரணை 27 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                  (ரஜனி)
உயர் தேசிய டிப்ளோமா பட்டதாரிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

உயர்தேசிய டிப்ளோமா பட்டதாரிகள் 228 பேர் தாக்கல் செய்த 'அடிப்படை மனித உரிமை மீறல்' மனு கலாநிதி பண்டாரநாயக்க அமரதுங்க மற்றும் கே.ஸ்ரீபவன் ஆகிய நீதியரசர் அடங்கிய குழு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பிரதிவாதிகள் கால அவகாசம் கேட்டதற்கு இணங்க எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பட்டதாரி பயிலுனர் ஆட்சேர்ப்பில் யாழ்.மாவட்ட உயர் தேசிய டிப்ளோமா பட்டதாரிகள் மட்டும் இணைத்துக் கொள்ளப்படாததைமைக்கு எதிராக 228 பேர் கடந்த மாதம் 31 ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

மனுதாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X