2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். வடமராட்சிக் கல்வி வலயத்தில் 3 பாடசாலைக் கட்டிடங்கள் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 20 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். வடமராட்சிக் கல்வி வலயத்தில் 3 பாடசாலைக் கட்டிடங்களும் வடமராட்சிக் கல்வி வலயக் கட்டிடமொன்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்  நேற்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி மத்திய மகளிர்; கல்லூரி, பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயம், பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசாலை ஆகியவற்றின் கட்டிடங்களும் வடமராட்சி வலயக் கல்வியலுவலகத்தின் கட்டிடமும் திறந்துவைக்கப்பட்டுள்ளன.

இதில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரீன், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடமாகாணஆளுநரின் செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன், வடமராட்சி வலயக்கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X