2025 மே 19, திங்கட்கிழமை

நல்லூர் உற்சவத்திற்காக வெளிமாவட்டத்திலிருந்து 600 பொலிஸார் வரவழைக்கப்படவுள்ளனர்

Kogilavani   / 2012 ஜூலை 21 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                       (ஜெ.டானியல், எஸ்.கே.பிரசாத்)

யாழ். நல்லூர் ஆலய உற்சவத்திற்காக வெளிமாவட்டத்திலிருந்து 600 பொலிஸார் பாதுகாப்பு கடமைக்காக வரவழைக்கப்படவுள்ளதாக யாழ்.பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நல்லூர் கோவில் உற்சவத்திற்காக பல பிரதேசங்களில் இருந்து மக்கள் வருகை தரவுள்ளனர். அவர்களையும் அவர்களது உடமைகளையும் பாதுகாப்பதற்காக விசேடமாக பொலிஸார் யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ளனர்.

இதேவேளை, நல்லூர் உற்சவக்காலத்தில் ஆலயத்திற்கு வரும் பத்தர்கள் தங்கள் உடமைகள் தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமெனவும் தங்க ஆபரணங்கள் அணிந்து வருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை யாழ்.பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்புக்காக பொலிஸார் தங்களது கடமைகளை திறமையான முறையில் மேற்கொள்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X