Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.மாவட்டத்தில் இந்த வருடத்தின் முதல் ஜந்து மதங்களில் 65 சிறுவர் தொழிலாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும், 414 சிறுவர்கள் பெற்றோர்களை இழந்துள்ளதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,
யுத்த காரணமாக யாழ்.மாவட்டத்தில்; பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் பலர் சிறுவர் பரமரிப்பு நிலையங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 253 சிறுவர்கள் இவ் வருடம் ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் பாடசாலை விட்டு இடைவிலகியுள்ளனர்.
சிறுவர்களை வேலைகளுக்கு அமர்த்தவது யாழில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. அதனைத் தடுப்பதற்கு சிறுவர்பாதுகாப்பு நிலையங்கள் சிறுவர்களை பாதுகாப்பதற்கு சிறந்த திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்.
எதிகால சிறுவர்களை கல்வியிலும் பண்பாட்டிலும் உருவாக்கவேண்டிய பாரிய பொறுப்பு எம் முன்னே எழுந்திருப்பதாகவும் சிறார்களின் நலனில் பெற்றோர்கள் அக்கறை காட்டுமாறும் அவர்களுக்கு கல்வி புகட்டுமர்றும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .