Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.மாவட்ட பாவனையாளர் விவகார அதிகார சபையால் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜுலை மாதம் வரை 252 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அத் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக அறிக்கையில் தெரிக்கப்பட்டவை வருமாறு,
யாழ்.வர்த்தக நிலையங்களில் பொருட்களுக்கான விலைகளை பட்டியலிட்டு காட்சிப்படுத்தாமை, குளிர்பானங்களை போத்தலில் பொறிக்கப்பட்ட விலையிலும் அதிகமாக விற்றமை,துணி வகைகளின் விலைகள் காட்சிப்படுத்தாமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை போன்ற குற்றங்களின் பேரிலேயே இவர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
சாவகச்சேரி, யாழ்ப்பாணம், மல்லாகம் ஆகிய நீதிமன்றங்களிலேயே இத்தகைய வழக்குகள் தொடரப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன.
வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையால் அறிவுறுத்தப்பட்ட வர்த்தக நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவ்வாறு பின்பற்றாதவர்கள் மீது தொடர்ந்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago