2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இலங்கையர் 8 பேருக்கு இந்தியப் புலமைப்பரிசில்

Menaka Mookandi   / 2014 ஜூலை 01 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியத் தூதரகம் 2014 - 2015 கல்வியாண்டிற்கான இளமாணி, முதுமாணி, கலாநிதிப் பட்டங்களுக்கு ஆயுர்வேதம், யுனானி, சித்த, ஹோமியோபதி யோகா கற்கை நெறிகளுக்காக ஆயுஷ; புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 08 புலமைப்பரிசுகளை இலங்கையர்களுக்காக வழங்கப்படவுள்ளன.

இது தொடர்பில் யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை (01) அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்தப் புலமைப்பரிசில் திட்டத்துக்கு திறமைவாய்ந்த இலங்கையர்களை இந்திய அரசு தெரிவுசெய்கிறது. இலங்கை அரசின் உயர்கல்வி அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் புலமைப்பரிசுக்குரியவர் இந்தியாவிலுள்ள சில மிகப்பிரபலமான பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்காக இந்திய அரசினால் தெரிவு செய்யப்படுவார்.

எல்லாப் புலமைப்பரிசுகளும் முழுமையான கல்விக்கட்டணம், கல்விக் காலம் முழுமைக்குமான மாதாந்த வாழ்க்கைப்படி என்பவற்றை வழங்கும். அத்துடன் தங்குமிடத்துக்கான கொடுப்பனவும் காகிதாதி மற்றும் புத்தகங்களுக்கான வருடாந்தக் கொடுப்பனவும் வழங்கப்படும்.

கலாச்சார உறவுகளுக்கான இந்தியப் பேரவையின் புலமைப்பரிசு பெறும் அனைவருக்கும் இந்தியாவில் முழுமையான வைத்தியப் பராமரிப்பு வசதிகளும் வழங்கப்படும்.

இப்புலமைப்பரிசுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமது சுயவிபரத்தை இலங்கை உயர்கல்வி அமைச்சு பரிந்துரைத்த படிவத்தில் நிரப்பி ஆவணங்ளை இணைத்து உயர்கல்வி அமைச்சுக்கு எதிர்வரும் ஜுலை 8 ஆம் திகதிக்கு முன்னர் உயர் கல்வி அமைச்சு 18, வார்ட் இடம், கொழும்பு 07 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.

விண்ணப்பப் படிவங்களை உயர்கல்வி அமைச்சின் இணையத்தள முகவரியான www.mohe.gov.lk  இல் பெற்றுக்கொள்ளலாம்.
புலமைப்பரிசின் ஏனைய விபரங்கள் மற்றும் அது தொடர்பிலான கையேட்டைப் பெற்றுக் கொள்ளwww.indianmedicine.nic.in என்ற இணையத்தளத்தையும் அணுக முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .