2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

87 தொழிலாளர்களுக்கு நிரந்தர நியமனம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}



-சுமித்தி தங்கராசா


யாழ். மாநகரசபையில் தற்காலிக தொழிலாளர்களாக கடமையாற்றிவந்த 87 பேருக்கு நிரந்தர நியமனங்களை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா திங்கட்கிழமை (28 வழங்கிவைத்துள்ளார். 

இதன்போது வேலைத்தளத் தொழிலாளர்கள் 72 பேருக்கும் மேசன் தொழிலாளர்கள் 03 பேருக்கும் சாரதிகள் 04 பேருக்கும் தச்சுத் தொழிலாளி ஒருவருக்கும் நகர மண்டப காப்பாளர்கள் 04 பேருக்கும்  இயந்திர திருத்துநர் ஒருவருக்கும் இயந்திர பகுதிக்கு 02 பேருக்கும்  நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

யாழ். மாநகரசபை முதல்வரின் மாநட்டு மண்டபத்தில் மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு நடைபெற்றது. 

சுகாதார தொழிலாளர்கள் 56 பேருக்கும் சாதாரண தொழிலாளிகள் 12 பேருக்கும் நிரந்தர நியமனங்கள்  மே மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படவுள்ளதாக யாழ். மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் கூறினார்.

மேற்படி நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையெனக் கூறி கடந்த 16ஆம் திகதி முதல் மாநகரசபை ஊழியர்கள் மாநகரசபை முன்றலிலும் தொடர்ந்து கடந்த 21ஆம் திகதி வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்னாலும் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .