2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ். மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்கள் 9இலிருந்து 5 ஆக குறைப்பு

Super User   / 2011 ஜூலை 28 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)


யாழ் மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்படும் நாடாளுமன்ற ஆசனங்களின்  9 இலிருந்து  5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையே இதற்கான காரணம் என தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழ் மாவட்டத்திலிருந்து குறைக்கப்படும் இந்த 4  ஆசனங்களும் இரத்தினபுரி, குருணாகல், பதுளை, மாத்தறை மாவட்டங்களுக்கு தலா ஒன்றுவீதம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1989 ஆம் ஆண்டு தேர்தலின்போது யாழ் மாவட்டத்திற்கு 11 ஆசனங்கள் இருந்தன. 1994 ஆம் ஆண்டு தேர்தலின்போது அந்த எண்ணிக்கை  10 ஆகவும் 2000 ஆம் ஆண்டு தேர்தலின்போது  9 ஆகவும் குறைக்கப்பட்டிருந்தது.

இனிவரும் தேர்தலின்போது யாழ் மாவட்டத்திலிருந்து 5 எம்.பிகள் மாத்திரமே  தெரிவுசெய்யப்படுவர்.

முன்னர் யாழ் மாவட்டத்தில் 816,005 வாக்காளர்கள் இருந்தனர். எனினும் யுத்தம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலானோர் இடம்பெயர்ந்த நிலையில்  2010 ஆம் ஆண்டின் வாக்காளர் பதிவுகளின்படி யாழ் மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை 484,791 ஆக குறைவடைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0

  • kulathooran Thursday, 28 July 2011 08:02 PM

    in respect of local government election is that so?

    Reply : 0       0

    aJ Thursday, 28 July 2011 08:06 PM

    இதை தானே அரசும் எதிர்பார்த்தது. இதுவும் ஒரு வகையில் இன அழிப்பு தான்.

    Reply : 0       0

    irfan Thursday, 28 July 2011 08:22 PM

    தேர்தல் திணைக்களம் என்றால் அரசாங்கம் தான் .இந்த செயலைச் செய்ததும் அரசாங்கம் தான். இன அழிப்பில் மற்றொரு மைல்கல் இது.

    Reply : 0       0

    Pasha Thursday, 28 July 2011 10:34 PM

    இது தமிழ் மக்கள் சனத் தொகையில் குறைவதை காட்டுகின்றது. ஒரு தலைவர் 50 க்கு 50 என்றார் இப்போ 100 க்கு 10 தேறுமோ தெரியாது. இவ்வருட சன தொகை கணக்கெடுப்பு விடை சொல்லும்.

    Reply : 0       0

    nakkiran Friday, 29 July 2011 04:58 AM

    புவியியல், மக்கள் தொகை, இனங்கள், சமூகஅமைப்பு, கருத்தில் கொள்க. எண்ணிக்கையை மட்டும் கருத்தில் எடுக்கக் கூடாது வெளிநாட்டில்
    வேலை செய்வோரும் தபால்மூலம் அல்லது வேறுவழிகளில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    Reply : 0       0

    Param Friday, 29 July 2011 08:16 PM

    Sinhalese achieved what they want . Stupid Tamils always took wrong decisions since Sir Pon Ramanathan and missed all the chances including 1987 and 2002.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X