எம். றொசாந்த் / 2018 நவம்பர் 01 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கில் 3 மாவட்டங்களில் கடந்த ஒரு மாத காலத்தில் 4 ஆயிரத்து 722 வெடிபொருட்கள் தமது நிறுவனத்தால் அகற்றப்பட்டு உள்ளதாக ஹலோரெஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த 16 வருட காலமாக வெடி பொருட்களை அகற்றும் பணியில் குறித்த நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.
தற்போது வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் குறித்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் இருந்து ஒரு மாதத்தில் ஆயிரத்து 498 மிதிவெடிகள், ஒரு வாகன எதிர்ப்பு மிதிவெடி, 209 வெடிக்காத வெடி பொருட்கள், 14 ஆபத்து குறைந்த வெடி பொருட்கள், மூவாயிரம் துப்பாக்கி ரவைகள் என்பவற்றை தாம் மீட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வெடி பொருட்களை அகற்ற மனித வலுவையும், இயந்திர வலுவையும் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago