2025 மே 15, வியாழக்கிழமை

100 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கல்

Editorial   / 2020 பெப்ரவரி 02 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட்டில், வறியக்கோட்டுக்குட்பட்ட 100 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு, பலாலி   பாதுகாப்புக் கட்டளைத் தலைமையகத்தில், இன்று (02) நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட வறிய மாணவர்களுக்கே, சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி ருவான் வணிகசூரிய பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .