Editorial / 2020 மார்ச் 29 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 110 சந்தேக நபர்கள் சரீரப் பிணையில் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடுமுழுவதும் சிறைச்சாலைகளில் உள்ள விளக்கமறியல் சந்தேக நபர்களை விடுதலை செய்து சிறையில் உள்ள நெருக்கடியை குறைப்பதற்கு சிறைச்சாலை திணைக்களம் ஜனாதிபதி ஊடாக நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அதனடிப்படையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கடந்த சில தினங்களில் மட்டும் 110 சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறு குற்றங்கள் புரிந்த நீதிமன்றங்களால் பிணை வழங்கப்பட்டு அவற்றை நிறைவு செய்ய முடியாது சிறையில் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டிருந்த 110 சந்தேக நபர்களே சரீரப் பிணையில் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
37 minute ago
45 minute ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
45 minute ago
1 hours ago
6 hours ago