Editorial / 2022 பெப்ரவரி 28 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 13ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களுக்கும் 07 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பிணையில் செல்ல கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டது.
இம்மீனவர்களை கைதுசெய்த கடற்படையினர், கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைத்ததையடுத்து, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதமன்ற பதில் நீதவான் எஸ்.பாலசுப்ரமணியம் முன்னிலையில் அன்றைய தினம் பகல் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, கடந்த 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை பகல் 11.40 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில், நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது இன்று (28) குறித்த இந்திய மீனவர்களை மன்றில் முன்னிலைப்படுத்துமாறும் அன்றைய தினம் குற்றப் பத்திரங்களை தாக்கல் செய்யுமாறும் கட்டளை இடப்பட்டது.
அதற்கமைவாக, 12 மீனவர்களும் மேற்படி பிணையில் செல்ல நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
அதேவேளை, இவர்களை கைது செய்யும்போது இவர்களிடமிருந்த கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஒருவரிடம் இருந்து மீட்கப்பட்ட மலேசிய நாணயம் மற்றும் இந்திய நாணயங்கள் விடுவிக்கப்பட்டதுடன், படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன அரசு உடைமையாக்கப்பட்டன.
இந்த வழக்கில் இந்திய மீனவர்கள் சார்பாக இந்தியத் துணைத் தூதரக அதிகாரி ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
56 minute ago
2 hours ago