Niroshini / 2021 ஓகஸ்ட் 26 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ் தில்லைநாதன்
பருத்தித்துறை, மணல்காடு கடற்பரப்பில், இன்று (26) அதிகாலை, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட 140 கிலோகிராம் கஞ்சாவுடன், இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடற்படையினர் நடத்திய விசேட ரோந்து நடவடிக்கையின் போதே, சுமார் 139 கிலோ 930 கிராம் கேரளா கஞ்சாவை கைப்பற்றினர்.
மணற்காட்டு கடற்பரப்பில் இருந்து, சந்தேகத்துக்கிடமான டிங்கி படகு ஒன்று, வேகமாக பயணிப்பதை அவதானித்த கடற்படையினர், படகை நிறுத்தியுள்ளனர்.
இதன் போது சாக்குகளை கடலில் வீசிவிட்டு, சந்தேகநபர்கள் தப்பிக்க முயன்ற போது , கடற்படையினர் அவர்களை கைதுசெய்தனர்.
33 minute ago
38 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
38 minute ago
4 hours ago