Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூன் 02 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். வலயக் கல்விப் பணிப்பாளராக வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளராகவுள்ள ஆர்.இராஜேந்திரம் நியமிக்கப்படவுள்ளார்.
வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளராக வடக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராகவுள்ள திருமதி செல்வின் இரேனியஸ் நியமிக்கப்படவுள்ளார்.
இந்த நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி இன்று வியாழக்கிழமை வழங்கி வைக்கவுள்ளார்.
யாழ்ப்பாணம் வலயக்கல்விப் பணிப்பாளராக இருந்த திருமதி அருளேஸ்வரி வேதநாயகம் இன்று தனது 60ஆவது வயதில் சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதனையடுத்தே இந்த நியமனங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளன.
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் 12 வலயக் கல்வி அலுவலகங்களிலுள்ள அதிகாரிகளுக்கு விரைவில் மாற்றங்கள் வழங்குவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago