2025 மே 21, புதன்கிழமை

நாம் வன்முறை மீது காதல் கொண்ட மன நோயாளிகள் அல்லர்: யாழ். மாநகரசபை உறுப்பினர் விந்தன்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 02 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாம் வன்முறை மீது காதல் கொண்ட மன நோயாளிகள் அல்லர் எனும் ஒரே காரணத்தை வைத்துக்கொண்டு நாம் பலவீனமானவர்கள் என நினைத்து தொடர்ச்சியாக எம் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து  விடப்படுமேயானால் அதற்கான பலன்களையும் அவர்களும் அனுபவிக்க நேரிடும் என யாழ். மாநகரசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அக்கட்சி உறுப்பினர் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ். மாநகர முதல்வரால் நேற்றையதினம் மாநகரசபை மாநாட்டு மண்டபத்தில் கூட்டப்பட்ட அவசர, அவசிய கலந்துரையாடலில் மாநகரசபை எதிர்க்கட்சி உறுப்பினராகிய எனக்கு ஆளும் தரப்பின் பலமான பின்னணியுடன் தொடர்ச்சியாக மாநகரசபைக்குள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வீடுகள் வரை கட்டவிழ்த்து விடப்பட்டுக்கொண்டிருக்கும் அச்சுறுத்தல்களும் அடாவடித்தனங்களும் இறுதியாக என்னை கொலை செய்ய திட்டமிட்ட செயற்பாடும் ஒரு கற்பனையான கட்டுக்கதை நிகழ்வு என வர்ணித்துள்ளார்.

மாநகர முதல்வர் தொடர்ச்சியாக தன்னாலும் அவரது கைக்கூலிகளாலும் நயவஞ்சகமான முறையில் எம் கண்முன்னேயும் முதுகுக்குப் பின்னாலும் தாங்கள் அரங்கேற்றி வரும் அத்தனை அராஜகங்களையும் அடாவடித்தனங்களையும் மாநகர உத்தியோகஸ்த்தர்கள், ஊழியர்கள், மாநகரசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உலகம் வாழ் தமிழினம் உட்பட அத்தனை பேருமே நன்கறிவர்.

உண்மைக்கு மேடையோ அன்றி வெளிச்சமோ போட்டுக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அது என்றோ ஒரு நாள் வெளிவரும். கண்ணாடி அலுவலகத்திற்குள் இருந்து கொண்டு கல் எறிந்து விளையாடும் கைங்கரியத்தையும் கைப்புண்ணுக்கு கண்ணாடி தேடும் செயற்பாட்டையும் முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைப்பதையும் விடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களாகிய எம் மீது தொடுத்துள்ள வன்முறைகளை நிறுத்தி அராஜகங்களும் அடாவடித்தனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். எனது குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மாநகர முதல்வர் சுதந்திரமான ஒரு விசாரணைக் குழுவை அமைப்பாரெனில் அத்தனை உண்மைகளையும் நாம் பட்டவர்த்தமாக தோலுரித்துக் காட்டி தங்களின் முகமூடியை கிழிப்போம் என உறுதியாக கூறுகின்றோம் என்றார்.        


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .