Suganthini Ratnam / 2011 ஜூன் 03 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் இரும்புப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் கோவிகளில் பாவிக்கப்பட்ட பொருட்கள் காணப்பட்டால் கடை உரிமையாளர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படுமென தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
திருட்டுப் பொருட்களை வாங்கியமை, திருட்டுப் பொருட்களை வைத்திருந்தமை, திருடர்களுக்கு உதவி செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் அவர் கூறினார். கோவில்களில் பாவிக்கப்பட்ட பொருட்கள் கோவில்களில் மாத்திரமே காணப்படும். இதனை விற்பனை நிலையங்களில் வைத்திருக்க முடியாது. கோவில்களில் பாவிக்கப்பட்ட பொருட்களை எவருக்கும் விற்பனை செய்யவும் முடியாது.
இருப்பினும் கடந்த சில மாதங்களாக கோவில்களிலிருந்து கற்சிலைகள், ஜம்பொன் சிலைகள் திருடப்படும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அவை தென்னிலங்கைக்கு எடுத்துச்செல்லப்படுகிறது அல்லது இரும்புப் பொருட்கள் விற்கும் கடைகளுக்கும் பழைய பொருட்கள் விற்கும் கடைகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
திருடப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதோ அல்லது அதனை வைத்திருப்பதோ குற்றமாகும். பாவிக்கப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்வதாக இருந்தால் விற்பனை செய்பவரின் விபரங்களை உரியமுறையில் பெற்றுக்கொள்ள வேண்டும். தேசிய அடையாள அட்டை இலக்கம், அவரது முகவரி ஆகிய விபரங்களை பெற்றுக்கொண்டு பொருட்களை கொள்வனவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கோவில்களிலிருந்து கடத்தப்படும் விக்கிரங்களை கொண்டு செல்வதை தடை செய்யும் முகமாக மிருசுவில் மற்றும் ஓமந்தை சோதனைச் சாவடிகளில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த பகுதிகளில் தற்போது மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்தப் பகுதி கோவில்களிலிருந்து விக்கிரங்கள் திருட்டுப் போகும் நிலைமை காணப்படுகின்றன.
39 minute ago
39 minute ago
49 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
39 minute ago
49 minute ago
58 minute ago