A.P.Mathan / 2011 ஜூன் 04 , பி.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் கிராம மட்டங்களில் வறுமை காரணமாக போசாக்கின்மை பொதுமக்களிடையே அதிகரித்து காணப்படுவதாகவும் இந்த நிலையைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது எனவும் உடனடியாக கிராமப்புற மக்களின் போசாக்கு நிலைமைகளில் பிரதேச செயலர்கள் கணிப்பீடு செய்து அவர்களுக்கு வேண்டிய அவசர, அவசியமான தேவைகளை ஆராய்ந்து இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் எனவும் யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற 'எல்லோருக்கும் போசாக்கு' என்னும் சுகாதார அமைச்சின் நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
யாழ்.மாவட்டத்தில் கிராமிய வறுமையை ஒழிப்பதற்கு விசேட திட்டம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவர்கள், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் யாழ். மாவட்ட பிரதேச செயலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



38 minute ago
38 minute ago
48 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
38 minute ago
48 minute ago
57 minute ago