Suganthini Ratnam / 2011 ஜூன் 07 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
கொக்காவில் தொலைத்தொடர்பு பரிவர்த்தனை கோபுர திறப்பு விழாவுக்குச் சென்ற யாழ். மாவட்ட அரசாங்க அதிகாரிகள் பலர் நிகழ்வில் கலந்து கொள்ளாது திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
தொலைத்தொடர்பு பரிவர்த்தனை கோபுர திறப்பு விழாவிற்கு இவர்கள் நேரம் தாமதமாகிச் சென்றிருந்தனர். இந்த நிலையில், பாதுகாப்புக் காரணங்களை காட்டி ஜனாதிபதியின் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு படைத்தரப்பினர் அனுமதிக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்புக் காணரங்களைக் காட்டி ஜனாதிபதி வருவதற்கு முன்னராக குறித்த நேரத்திற்கு வந்து உரிய இடத்திலுள்ள தமது இருக்கைகளில் அமருமாறு ஏற்கெனவே இவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் குறிப்பிட்ட சில அதிகாரிகள் நேரம் தாமதமாகிச் சென்றமையால் இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
39 minute ago
39 minute ago
49 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
39 minute ago
49 minute ago
58 minute ago