Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூன் 09 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வடமாகாணத்தில் பயிற்சி பெற்ற 222 மாணவ குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான தற்காலிக நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் 73 பேருக்கும் வவுனியாவில் 50 பேருக்கும் முல்லைத்தீவில் 30 பேருக்கும் கிளிநொச்சியில் 37 பேருக்கும் மன்னாரில் 32 பேருக்குமாக மொத்தமாக 222 மாணவ குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு தற்காலிக நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
மாணவ குடும்ப நல உத்தியோகத்தர்களின் சமூகப் பொறுப்பு மற்றும் அவர்களின் எதிர்கால சேவை தொடர்பாக அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய வடமாகாண ஆளுநர், வடமாகாணத்தின் சுகாதார சேவையை ஆளுமையுடன் கொண்டு செயற்படுத்துவதற்கு குடும்பநல உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் ஆ.சிவசுவாமி, வடபிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், கிளிநொச்சி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் க.கார்த்திகேயன் மற்றும் வடமாகாண சுகாதார உத்தியோகத்தர்களெனப் பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago