Menaka Mookandi / 2011 ஜூன் 14 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
யாழ்ப்பாணத் தமிழ் அரச வம்சத்தவனாகப் புகழ்பெற்ற அரசகேசரிக்கு நீர்வேலி, அரசகேசரிப் பிள்ளையார் கோவில் திருக்குடமுழுக்குப் பெருவிழாவின் போது திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு 'பக்தப் பிரதிட்டை' செய்து வைக்கப்பட்டது.
சிவஸ்ரீ சா.சோமதேவக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரச அதிபர் கலந்து கொண்டு மன்னன் அரசகேசரியின் திருவுருவத்துக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து வலி.கிழக்குப் பிரதேச செயலர் ம.பிரதீபன், கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசன், யாழ். செயலகக் கணக்காளர் ச.குகதாசன், உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பலர் அரசகேசரியின் திருவுருவத்திற்கு முதல் மரியாதை மேற்கொண்டனர்.
இத்திருவுருவச் சிலையை இந்தியாவின் பிரபல சிற்பாசாரியாராகிய புருசோத்தமன் செதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


39 minute ago
39 minute ago
49 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
39 minute ago
49 minute ago
58 minute ago