Menaka Mookandi / 2011 ஜூன் 20 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உணவு வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வகைகளை எவ்வாறு தயாரிப்பது தொடர்பாக நல்லூர் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று திங்கட்கிழமை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
நல்லூர்ப்பகுதியில் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய உணவுவகைகளும் தரமில்லாத உணவுகளும், போசாக்கின்மையான உணவுகளும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் நல்லூர் பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி ஆ.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இனிவரும் காலங்களில் தரமில்லாத சுகாதாரத்துக்கு கேடான வகையில் உணவுத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டால் தயவு தாட்சண்யம் இன்றி உடனடியாக சீல் வைக்கப்பட்டடு வர்த்தக நிலையம் மூடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உணவு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பொதுச் சுகாதார அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026