Suganthini Ratnam / 2011 ஜூன் 27 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் கடல் அரிப்பைத் தடுப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளும் கடற்றொழில் சார்ந்த அமைப்புக்களினால் இதுவரை எடுக்கப்படவில்லை. எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள தீவுக்கூட்டங்கள் கடலுக்குள் போகும் வாய்ப்பு காணப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடா பரந்த நீரியல் சூழல்த்தொகுதி எல்லைகளுக்கிடையிலான தீர்வு காணல் மற்றும் பகுப்பாய்வு தொடர்பான ஆய்வு மாநாடு யாழ். பிள்ளையார் விடுதியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
யாழ்;. குடாக்கடலிலுள்ள கடல் வளங்கள் இந்திய மீனவர்களினால் அள்ளிச் செல்லப்படுகின்றன. இதனால் குடாநாட்டு மீனவ சமூகம் பாரிய வாழ்வியல் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துள்ளது. யாழ். மீனவ சமூகத்தின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. வடகடலிலிருந்து அளவுக்கு அதிகமான கடல் வளங்கள் அபகரிக்கப்படுகிறது. அந்த அபகரிப்பை தடுத்து நிறுத்துவதற்கு கடற்றொழில் சார் அமைப்புக்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில் வங்காள விரிகுடா பரந்த நீரியல் சூழல்த்தொகுதி அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சிசிர கபுதன்திரி, ஆலோசனை முகாமையாளர் பர்ணாந்து, மற்றும் வடமாகாண கடற்றொழில் சார் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
.jpg)
53 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
3 hours ago