2025 மே 21, புதன்கிழமை

யாழில் தேர்தல் முறைப்பாட்டு அலுவலகம் திறப்பு

Kogilavani   / 2011 ஜூன் 28 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். உதவித்தேர்தல் ஆணையாளரின் கண்காணிப்பின் கீழ் தேர்தல் முறைப்பாட்டு அலுவலகம் ஒன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 1 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ளுராட்சி தேர்தலில் இடம்பெறும் வன்முறைகள், தேர்தல் விதி முறைகளை மீறல், அச்சுறுத்தல் சம்பவங்கள்  தெடர்பாக அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், வாக்காளர்கள் தங்களது முறைப்பாட்டை நேரில் அல்லது தொலைபேசி மூலமாக,  தொலைநகல் மூலமாக தங்களது முறைப்பாட்டைத் தெரிவிக்க முடியும் என தேர்தல் திணைக்கள உதவித் தேர்தல் ஆணையார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் நீதியாக சுமுகமாக நடத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் , பொலிஸார், இராணுவத்தினர் இணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X