Suganthini Ratnam / 2011 ஜூன் 30 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹேமந்த்)
கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலயத்தின் இருமாடிக் கட்டடத்துக்கான அடிக்கல் நேற்று புதன்கிழமை நாட்டி வைக்கப்பட்டது.
வித்தியாலய அதிபர் எஸ்.ஸ்ரீகுமரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
கீரிமலை நகுலேஸ்வர தேவஸ்தானத்தில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து அத்திவாரக் கற்கள் சிவஸ்ரீ கு.நகுலேஸ்வரக் குருக்களால் பாடசாலை அதிபரிடமும் விருந்தினர்களிடமும் கையளிக்கப்பட்டது.
கொழும்பிலிருந்து வருகை தந்த நிதி ஆணைக்குழு அதிகாரிகளும் வடமாகாண கல்விச் செயலாளர் வே.தி.செல்வரத்தினம், மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன், வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆ.ராஜேந்திரன், தெல்லிப்பளை கோட்டக் கல்விப் பணிப்பாளர் ச.கைலாசநாதன், வலி.வடக்கு உதவிப் பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி, மாகாண பாடசாலைப் பொறியியலாளர் ஏ.ஆண்டியப்பு, மாவட்ட பாடசாலைப் பொறியியலாளர் ஜி.சிவபாலன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலயம் உயர்பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்தது. இந்த நிலையில், இப்பாடசாலை இடம்பெயர்ந்த நிலையில் 20 வருடங்களாக சண்டிலிப்பாயில் இயங்கி வருகின்றது.
இதேவேளை மாவிட்டபுரம் வடக்கு அ.மி.த.க.பாடசாலை, மாவிட்டபுரம் தெற்கு அ.மி.த.க.பாடசாலை, வலித்தூண்டல் றோ.க.த.க.பாடசாலை ஆகியவற்றுக்கான அடிக்கற்களும் அன்றையதினம் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர், மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரால் நாட்டி வைக்கப்பட்டன.
.jpg)
.jpg)
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago