2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கோழி வளர்ப்புத் திட்ட உதவி

Suganthini Ratnam   / 2011 ஜூலை 29 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ்ப்பாணம் வணிகர்கழகம் யாழ். மாவட்டத்தில் முன்னெடுத்துள்ள வாழ்வாதாரத் திட்டத்தில் ஒன்றான கோழி வளர்ப்புத் திட்டத்தை கிளிநொச்சி மாவட்டத்திலும் மேற்கொள்ளும்படி கிளிநொச்சி மாவட்ட பொதுஅமைப்புகள் மற்றும் பொதுமக்களும்  வணிகர்கழகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்.  மாவட்டத்தில் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம் பாதிக்கப்பட்ட பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக அமைந்துள்ளது.

இந்த நிலையிலேயே கிளிநொச்சி மாவட்டத்திலும் இந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய இந்தத் திட்டத்தை முன்னெடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையான பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வதினால் யாழ். மாவட்டத்திலும் பார்க்க அதிகளவான மக்களுக்கு இந்த உதவியை வழங்க வணிகர்கழகம் முன்வந்துள்ளனர். கிளிநொச்சி,  பளை, கண்டாவளை, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலகங்களிலும் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு உதவிகள் வழங்கப்படவுள்ளதாக வணிகர் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X