Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2011 ஜூலை 29 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ், கிரிசன்)
உதயன் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் (வயது 61) இனந்தெரியாத நபர்களினால் இன்று மாலை தாக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை 6.30 மணியளவில் உதயன் தலைமைக் காரியாலயத்திலிருந்து வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த இவரைப் பின்தொடர்ந்துள்ள இனந்தெரியாத நபர்கள் சிலர் அவரது தலையில் பலமாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உதயன் நிர்வாகக் குழுவினரால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
Nesan Saturday, 30 July 2011 03:00 AM
வாழ்க இலங்கையின் ஊடக சுதந்திரம்
Reply : 0 0
aJ Saturday, 30 July 2011 03:42 AM
எப்படி தான் அரசுக்கும் போலீஸ்க்கும் இப்படியான தொடர் தாக்குதல் தெரியாமல் இருக்கிறதோ.
வெட்கம்.
தேர்தல் தோல்வின் வெளிப்பாடு.
வடக்கின் வசந்தம் இப்படி தான் வீசுகிறது
ஊடகத்துக்கு எதிரான பயங்கரம்.
இப்படி சொல்லிகொண்டே போகலாம்.
அவர் நலம் பெற்று வந்து நீதிக்காக, உண்மைக்காக உழைப்பர் என்று வேண்டுகிறேன் :sad:
ஆசியாவின் அதிசயம் லங்கா ஜனநாயகம் வாழ்க
Reply : 0 0
ruban Saturday, 30 July 2011 03:44 AM
கோழைத்தனமான செயல். இதனை தாங்களும் கண்டிப்பதாக அறிக்கை வரும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago