Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூலை 31 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூத்த பத்திரிகையாளர் குகநாதன் குண்டர்களின் தாக்குதலுக்குள்ளக்கியிருப்பதை தாம் வன்மையாக கண்டிப்பதாக சிவராம் ஞாபகார்த்த மன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த மன்றம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜனநாயக சூழல் உருவாகியுள்ளது என்று அரசு கூறிவரும் இவ்வேளையில் ஊடகங்களுக்கு எதிரான பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
நீண்டகால போர்ச்சூழலில் சிக்கியிருந்த இலங்கை ஊடகத்துறைக்கு தற்போது சுதந்திரமாக செயற்பட வாய்ப்புக்கள் கிடைத்திருப்பதாக அவ்வப்போது அரசாங்க தரப்பு தெரிவித்தும் வருகின்றது.
எனினும் ஊடகத்திற்கு எதிரான பயரங்கரவாதத்திற்கு துணை போகின்றவர்களையும் சம்பந்தப்பட்டவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று சொல்லுமளவிற்கு நிலைமைகள் இருக்கின்றன. இதற்கிடையில் ஊடகத்திற்கு எதிரான பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களையும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு அவர்களும் முடக்கப்பட்டுள்ளனர்.
இதனால் ஊடகத்துறை தொடர்பான விழிப்புணர்வற்ற ஒரு சமூகம் இலங்கையில் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. ஊடகவியலாளர்களின் பணிகள் கொச்சைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு சமூகச் சீரழிவை நோக்கிய இருண்ட சமூகம் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஞானசுந்தரம் குகநாதன் போர்ச் சூழ்நிலைகளின் மத்தியில் ஊடகத்துறையில் பணியாற்றியுள்ளார். பல வரலாற்றுக் காலங்களையும் பல வரலாற்று நிகழ்வுகளையும் கண்டும் அனுபவித்தும் சகித்தும் சாதித்தும் எதிர்த்தும் எழுதியும் உள்ளார். பல அரசியல் தலைவர்களிடம் மரியாதைக்குரியவராகவும் செல்வாக்குள்ளவராகவும் இருக்கின்றார். இவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஊடகத்துறைக்கு மட்டுமல்ல வரலாறுகளை நேசிப்பவர்களையும் ஜனநாயகத்தை மதிப்பவர்களையும் அச்சுறுத்துவதாகவே அமைந்துள்ளது.
தொடர்ச்சியான தாக்குதல் முயற்சிகள் ஞானசுந்தரம் குகநாதன் மீது மேற்கொள்ளப்பட்டபோது தெய்வதீனமாக அவர் தப்பிபிழைத்தும் அவர் தொடர்ந்தும் குடாநாட்டை விட்டு வெளியேறாது தற்துணிவுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் துரதிஷ்டவசமாக நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை தாக்கப்பட்டார் என்ற செய்தி எம்மை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago