2025 மே 20, செவ்வாய்க்கிழமை

உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் மீதான தாக்குதலுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி கண்டனம்

Super User   / 2011 ஜூலை 31 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞா. குகநாதன் மீதான கொலை முயற்சியை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாக கண்டிக்கின்றது என அக்கட்சயின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இத்தகைய அனர்த்தத்தினை குகநாதன் எதிர்கொள்ளுவது இது முதல் தடவையல்ல. முன்பு ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு ஆயுத குழு அவரது அலுவலகத்திற்குள் புகுந்து அவரை தேடி கிடைக்காமையால் அங்கிருந்த அப்பாவி ஊழியர்கள் இருவரை கொன்று தமது இரத்தத் தாகத்தை தீர்த்துக்கொண்டனர்.
 
இத்தகைய மிருகத்தனமான செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். உடகவியலாளரின் மீது வெறுப்பல்லாமல் வெறும் பணத்திற்காகவே ஒரே குழு மீண்டும் மீண்டும் செயற்படுவதால் பொலிஸார் தீவிர முயற்சி செய்து இதனை ஒழிக்க வேண்டும்.
 
இத்தகைய செயல்களுக்கு எவருமே ஊக்கம் கொடுக்காது அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து இவ்வாறான செயல்களை அழிக்க உதவுவோம். குகநாதன் விரைவில் பூரண நலமடைய பிரார்த்திக்கின்றோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X