2025 மே 20, செவ்வாய்க்கிழமை

குகநாதன் மீதான தாக்குதலுக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும்: அடைக்கலநாதன் எம்.பி.

Super User   / 2011 ஜூலை 31 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மூத்த ஊடகவியலாளர் ஞானசுந்தரம் குகநாதன் மீதான தாக்குதலுக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என தமிழத் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டள்ள கண்டன அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

'ஊடகவியலாளர் குகநாதனுக்கு நீண்ட காலமாக அச்சுறுத்தல் இருந்து வந்த. அவர் சில காலம் அலுவலகத்துக்குள்ளேயே தங்கியிருந்தார். யுத்தம் முடிவடைந்த பின்னர் ஊடக சுதந்திரம்,  ஊடக ஜனநாயகம் இருப்பதாக அரசாங்கம் பிரசாரம் செய்தது.அதனை நம்பியே குகநாதன் வெளியில் நடமாட ஆரம்பித்தார்.

ஆனால், அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் திட்டமிடப்பட்ட ஒரு கொலை முயற்சி.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக சூழல் இல்லை என்பதற்கு குகநாதன் மீதான தாக்குதல் உதாரணமாகும். உள்ளூராட்சி தேர்தல்களின்போது வடபகுதியில் அரச தரப்பினரால் நடத்தப்பட்ட வன்முறைகள் தொடர்பான செய்திகளை தமிழ் ஊடகங்கள் பட்டவர்த்தனமாக வெளியிட்டன. அதனால் ஆத்திரமடைந்த சில குழுக்கள் குகநாதன் மீதுதாக்குதல் நடத்தியுள்ளன.

இவ்வாறான தாக்குதல்கள் மூலம் தமிழ் ஊடகவியலாளர்களின் சேவைகளையும் தமிழ் மக்களின் தமிழத் தேசிய உணர்வுகளையும் எவராலும் கட்டுப்படுத்திவிட முடியாது.'
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X