Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் நடைபெற்ற பிரதேச சபை, நகர சபை ஆகியவற்றுக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று சபைகள் தவிர்ந்த ஏனையவற்றில் அமோக வெற்றியீட்டியமைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி வாக்காளப் பெருமக்களுக்கு தமது நன்றியை தெரிவிக்கின்றது என அக்கட்சியின் தலைவர் வீ.அனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்ததுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆறு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தேர்தல்களிலும் மற்றும் இத்தேர்தல்களிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களின் இன்றைய இக்கட்டான நிலையினை உணர்ந்து எதுவித நிபந்தனையும் இன்றி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவருக்கும் பூரண ஆதரவு கொடுத்தது.
அத்துடன் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளிற்கிணங்க பச்சிலைப்பள்ளி, பூநகரிப் பிரதேச சபைகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவருக்கும், பல்வேறு தடங்கல்கள், அசம்பாவிதங்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் வாரி வழங்கப்பட்ட இலவசங்கள் என்பனவற்றையும் மீறி வாக்களித்த மக்களின் உறுதியான நிலைப்பாட்டை எம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது.
இத்தேர்த்தலில் செயற்பட்டது போன்று இனிவரும் காலங்களில் மக்கள் கட்சி பேதமின்றி தமத ஒற்றுமையை வெளிப்படுத்தி இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வுகாண உதவுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago