Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 08 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
கீறின் காட் லொத்தர் விசா நிகழ்ச்சியில் வெற்றி பெற உதவ முடியும் என கூறும் எவரையும் நம்பி பணம் செலுத்த வேண்டாம் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் தெரிவித்தது.
செல்வாக்கை பயன்படுத்தியோ இலஞ்சம் கொடுத்தோ எவருமே கீறின் காட் லொத்தர் விசாவினை பெறமுடியாது என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலய அதிகாரி கத்ரின் பொன்டி தெரிவித்தார்.
கீறின் காட் லொத்தர் விசா பற்றிய அறிவுரையும் ஆலோசனை கருத்தரங்கும் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
"கீறின் காட் லொத்தர் விசா நிகழ்ச்சியில் உங்களுக்கு விசா என்னால் பெற்றுத்தர முடியும். எனக்கு ஜக்கிய அமரிக்க அதிகாரிகளை தெரியும்" எனக் கூறி உங்களை ஏமாற்றுபவர்களை நம்பவேண்டாம். அவர்களிடம் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என்றார்.
கீறின் காட் லொத்தர் விசா பற்றிய மேலதிக விபரங்களையும் விசா விண்ணப்பங்களையும் www.dvlottery.state.gov என்ற இணையத்தள முகவரியில் பார்வையிட முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .