2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ். மாநகர சபையில் நவீன வசதிகளுடன் சோலைவரி பகுதி

Super User   / 2011 ஓகஸ்ட் 08 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

நீண்ட காலமாக எந்தவித நவீன புனரமைப்புமின்றி இயங்கிய யாழ். மாநகர சபையின் சோலைவரி பகுதி தற்போது நவீன முறையால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.

நவீன முறையில் புனரமைப்பு செய்யப்பட்ட சோலைவரி பகுதி பொதுமக்கள் பயன்பெறும் விதத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாகவும் மக்களின் தேவைகளை நிலைவேற்றுவதற்காக துரித சேவைக்காக கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நவீன புனரமைப்பின் மூலம் யாழ். வரியிறுப்பாளர்களுக்கு மேலும் சிறந்த சேவையை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X