2025 மே 20, செவ்வாய்க்கிழமை

உலக வங்கிப் பிரதிநிதிகள் நாளை யாழ். விஜயம்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 09 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் உலக வங்கியின் நிதிப்பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிடுவதற்காக உலக வங்கிப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கு நாளை புதன்கிழமை விஜயம் செய்யவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் 533.5 மில்லியன் நிதியுதவி மூலம் யாழ்ப்பாணத்தில் பாரிய வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வேலைத்திட்டங்களின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக நாளை காலை 8.30 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் விசேட சந்திப்பொன்று நடைபெறுமெனவும் அவர் கூறினார்.

உலக வங்கியின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை பார்வையிடவுள்ளதுடன், மீளக்குடியேறிய மக்களின் வாழ்விடங்களுக்கு செல்லவுள்ளதாகவும் இமெல்டா சுகுமார் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X