2025 மே 20, செவ்வாய்க்கிழமை

துணிகளிலிருந்து பெறுமதிசேர் உற்பத்திகளை உருவாக்கும் பயிற்சி யாழில் ஆரம்பம்

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 10 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பெண்களின் சுயதொழில் முயற்சியை ஊக்குவிக்கும் முகமாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கை கைத்தொழில் சபையினால் துணிகளிலிருந்து பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தி பொருட்களை உருவாக்கும் பயிற்சிநெறி இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த மூன்று மாத பயிற்சியை யாழ். வீரசிங்கம் கேட்பொர் கூடத்தில் ஆரம்பித்து வைத்தார்.

இதில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். பெண்களின் குடும்ப வருமானத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தோடு இப்பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X