2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இடையில் கைவிடப்பட்ட திருட்டு முயற்சி

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ். சத்திரசந்திப் பகுதியிலுள்ள பலசரக்குக் கடையொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வேளையில் மேற்கொள்ளப்பட்ட திருட்டு முயற்சி இடையில் கைவிடப்பட்டுள்ளது.

கடை உரிமையாளர் மறுநாள் காலையில் தொழில் நடவடிக்கை நிமித்தம் கடைக்குச் சென்றபோது கடையின்  பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன், கடை நுழைவாயிலில் துப்பாக்கி ரவையும் இருந்ததை கண்ட நிலையில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த கடைக்குச் சென்ற பொலிஸார் துப்பாக்கி ரவையை மீட்டதுடன், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X