Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாநகர சபையால் வருடாந்தம் வழங்கும் 'யாழ்.விருது' இந்த முறை புற்றுநோய் வைத்திய நிபுணர் என்.ஜெயக்குமாரனுக்கு வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் மு.செ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
சிறந்த சமூக சேவையாளரும், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறந்த மருத்துவ சேவையாற்றி வருபவரும், வைத்தியத்துறையில் ஆராட்சிகளை மேற்கொண்டு வருபமான புற்றுநோய் வைத்திய நிபுணர் என்.ஜெயக்குமாரன் பொதுமக்களின் நன்மதிப்பும் பெற்றவராவார் என யாழ்.மாநகர சபை ஆணையாளர் கூறியுள்ளார்.
இவரைக் கௌரவிப்பது மிகவும் சிறந்தது என்பதால் யாழ். மாநகர சபையால் வழங்கப்படும் உயர் விருது இவருக்கு வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் 19ஆம் திகதி நல்லூர் கந்தன் மலர் வெளியீட்டு விழாவில் புற்றுநோய் வைத்திய நிபுணர் என்.ஜெயக்குமாரன் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாக யாழ். மாநகரசபை ஆணையாளர் மு.செ.சரவணபவன் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .