Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ். சித்தங்கேணிச் சந்திக்கு அண்மையாகவுள்ள வரலாற்றுப் புகழ்மிக்க சிவன்கோவிலில் பணம் மற்றும் நகைகள் திருட்டுப்போயுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் ஆலய பரிபாலனசபையினர் முறைப்பாடு செய்துள்ளனர்.
சுமார் இருபது இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் உட்பட நகைகள் மற்றும் பணமும் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை திருட்டுப்போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவுநேர பூஜை வழிபாடுகளை முடித்துவிட்டு ஆலயத்தைப் பூட்டிச் சென்றதாகவும் மறுநாள் காலையில் ஆலயத்திற்கு வந்த பூசாரி, ஆலயத்தின் கதவைத் திறந்து உள்ளே சென்றபோது ஆலயத்தின் கருவறை உட்பட ஏனைய அறைகள் உடைக்கப்பட்டு திருட்டுப்போயுள்ளதை கண்டுள்ளார்.
பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் பல நூற்றாண்டுகால வெண்கலப் பொருட்கள் திருடப்பட்டுள்ள அதேவேளை, உண்டியலிலிருந்த பணம் மற்றும் சாத்துப்படி நகைகளும் திருடப்பட்டுள்ளன.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .