2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நோயாளரைப் பார்வையிட வந்த ஒருவர் மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். போதனா வைத்தியசாலையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளரைப் பார்வையிட வந்த ஒருவருக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கைகலப்பு ஏற்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை பார்வையிடுவதற்கான வரிசையில் ஒழுங்காக செல்லவில்லை என்பதற்காக  நோயாளரைப் பார்வையிட வந்தவரை  பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தாக்கியுள்ளனர். இந்த நிலையிலேயே பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் பொதுமகனுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டது.  

இச்சம்பவத்தையடுத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்ற யாழ். பொலிஸார், அவர்களை எச்சரித்த பின்னர் விடுதலை செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X