2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தான் பிரசவித்த குழந்தையை தீ வைத்து எரித்த தாய் கைது; கிளிநொச்சியில் சம்பவம்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 17 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் பிறந்த குழந்தையை தீமூட்டி எரித்த தாயொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கிளிநொச்சிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அக்கராயன் சந்திக்கு அருகிலுள்ள குடியிருப்பில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளுக்கு தாயான இப்பெண் தான் பிரசவித்த குழந்தையை  குப்பைக்குள் போட்டுத் தீமூட்டி எரித்துக்கொண்டிருந்ததை அவதானித்த அயலவர்கள் இச்சம்பவம் குறித்து அருகிலுள்ள இராணுவ முகாமில் தகவல் வழங்கினர். இராணுவத்தினர் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தவே சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார்  குறித்த பெண்ணை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட அப்பெண் கணவனை இழந்தவரென விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகக் கூறிய பொலிஸார்,  இன்று புதன்கிழமை அப்பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0

  • meenavan Wednesday, 17 August 2011 08:44 PM

    கலியுகத்தில் இப்படியும் ஒரு தாய். வறுமை,விரக்தி, வெறுப்பு இதன் மூலகாரணமாக இருக்குமோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X