2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ். பல்கலைக்கழகத்தின் 'விஞ்ஞான தினம்' நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 17 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீடம் விசேடமாக ஏற்பாடு செய்துள்ள 'விஞ்ஞான தினம்' கைலாசபதி கலையரங்கில் இன்று புதன்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

இந்த விஞ்ஞான தின விழாவில் பிரதம அதிதியாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்னம் கலந்துகொண்டு விஞ்ஞானபீடத்தின் அண்மைக்கால சாதனைகள் பற்றி உரையாற்றவுள்ளார்.

சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் எஸ்.கந்தசுவாமியும் கௌரவ விருந்தினராக குமார வடிவேலும் கலந்து கொள்ளவுள்ளனர்.
விஞ்ஞானமன்றத்தின் சிறப்பு கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X