Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் வாழ்வெழுச்சி மனைப் பொருளாதார தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குடிசைக் கைத்தொழில் கண்காட்சியும் விழிப்புணர்வுக் கருத்தரங்கும் யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் மாதம் 10,11 ஆம் திகதிகளில் யாழ்.மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் இன்று புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு
இக் குடிசைக்கைத்தொழில் கண்காட்சியில் பங்குபற்றுவதன் மூலம் தமது உற்பத்திகளுக்கான நிலையான சந்தைவாய்ப்பை பெற்றுக் கொள்ளவும் ஏனைய நிதி நிறுவனங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தவும் மேலதிக தொழிற்பயிற்சியை பெறவும் முடியும்.
இதில் பங்கு பற்றுபவர்களை தெரிவு செய்யும் பொறுப்பில் பிரதேச செயலர்கள், கிராம சேவையாளர்கள் மற்றும் கைத்தொழில் அபிவிருத்திச் சபை, தேசிய வடிவமைப்புச் சபை அதிகாரிகள் ஈடுபடவுள்ளனர்.
குடிசைக் கைத்தொழில் கண்காட்சியில் தங்களது உற்பத்திகளை காட்சிப்படுத்த விரும்புவோர் தங்களது பிரதேச செயலர்களிடம் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .