Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வடமாகாண விவசாயத் திணைக்களம், திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ். மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம், கமநல அபிவிருத்தித் திணைக்கள விவசாயிகள் கூடம், வானிலை அவதான நிலையம் ஆகியன இணைந்த வளாகத்தில் 'இயற்கையுடன் இணைந்த நிலைபேறான விவசாயத்தை நோக்கி' எனும் தொனிப் பொருளிலான மாபெரும் பசுமைப்புரட்சி விவசாயக் கண்காட்சி யாழில் நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரையான 5 நாட்கள் நடைபெறவுள்ளது.
இதில் யாழ்.மாவட்டத்தில் விவசாய இயந்திரங்கள், உபகரணங்கள் என்பவற்றில் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் உற்பத்தியாளர்களும் உள்ளூரில் பழங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கைத்தொழில் நிறுவனங்களும் விவசாய உற்பத்திப் பொருட்களின் பெறுமதிசேர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சமூக மட்ட அமைப்புகளும் பங்குபற்ற முடியும்.
இக்கண்காட்சி தொடர்பான மேலதிக விபரங்களை க.தனபாலசிங்கம், பாடவிதான உத்தியோகத்தர் வி.இளங்குமார், விவசாயக் கண்காணிப்பு உத்தியோகத்தர் ஆகியோருடன் 077-9114399, 077-610 6648 எனும் தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என யாழ்.பிரதி விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் அறிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .