2025 மே 19, திங்கட்கிழமை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சத்தியப்பிரமாணம் நிகழ்வு

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன், கவிசுகி)

கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண வைபவம் இன்று முற்பகல் 11.00 மணியளவில் நல்லூர் இளம் கலைஞர் மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது.

வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று தமது சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டதைத் தொடர்ந்து இரா.சம்பந்தன் சத்தியப்பிரமாணத்தை ஏற்று கையொப்பமிட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், எஸ்.ஸ்ரீதரன், அ.விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதராதலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன், பொன்.செல்வராசா உட்பட மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பிரமுகர்கள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X