2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திராட்சைப் பழங்களில் ஒருவித நோய்த்தாக்கம்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தின் சில பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் திராட்சைப் பழங்களில் ஒருவித நோய்தாக்கம் ஏற்பட்டிருப்பதாக திராட்சைப்பழ உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உரும்பிராய், இளவாலை, கோப்பாய் பகுதிகளில் அண்மையில் உற்பத்தி செய்யப்பட்ட திராட்சைப் பழங்களில் ஒருவித நோய்த்தாக்கம் அதிகரித்திருப்பது தொடர்பில் திருநெல்வேலி விவசாயத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும்  இந்த நோய்த்தாக்கம் தொடர்பாக விவசாயத் திணைக்களம் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் திராட்சைப்பழ உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திராட்சைப்  பழங்களில் ஏற்பட்டுள்ள ஒருவித நோய்த்தாக்கம் காரணமாக திராட்சைப் பழங்களின் அதிஉச்ச வளர்ச்சி வீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திராட்சைப்பழ உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X