2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். சிறையிலிருந்து தப்பியோடிய கைதி நான்கு மாதங்களின் பின் கைது

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் யாழ். சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக யாழ். உதவிச் சிறைச்சாலை அத்தியட்சகர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

மேற்படி சிறைக்கைதியை இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேற்படி கைதி திருட்டுச் சம்பவங்கள் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டதாகக் கூறி நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.  பல மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேற்படி கைதி விடுதலையாவதற்கு மூன்று மாதங்களே இருந்த நிலையில், சிறைச்சாலையின் வெளியில் வேலையில் ஈடுபட்டிருந்தபோது தப்பியோடியுள்ளார்.

யாழ். நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தேடப்பட்டு வந்த மேற்படி கைதி நண்பர்களுடன் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது யாழ். மருதனார்மடம் சந்தியை அண்மித்த பகுதியில் பிடிபட்டதாகவும் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X