2025 மே 19, திங்கட்கிழமை

காரைநகரில் கடற்படையினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு பணக் கொடுப்பனவுகள்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கடந்த காலங்களில் யாழ். மாவட்டத்தில் காரைநகர் கடற்படைத்தள விஸ்தரிப்புக்காக கடற்படையினரால் சுவீகரிக்கப்பட்ட 55 பேரினது காணிகளுக்கான பணக் கொடுப்பனவுகள் காணி அமைச்சினால் வழங்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் இன்று திங்கட்கிழமை விடுத்த ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காணிகளை இழந்த 132 பேரில் முதற்கட்டமாக 55 பேருக்கு 5,72,58,500 ரூபா காசுக்கான காசோலைகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.  எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 06ஆம் திகதி காரைநகர் உதவி அரசாங்க அதிபர் பணிமனையில் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சரினால் இக்கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.  

மேலதிக விபரங்கள் தேவைப்படுமானால் காரைநகர் உதவி அரசாங்க அதிபர் பணிமணையுடன் தொடர்புகொண்டு தங்களுக்கு தேவையான விபரங்களைப் பெற்றுக்கொள்ளமுடியுமென இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • s.s.keerthi Tuesday, 23 August 2011 12:04 AM

    தட் இஸ் வெரி குட்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X