2025 மே 19, திங்கட்கிழமை

டெங்குநோய் காரணமாக உயர்தர வகுப்பு மாணவன் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் டெங்குநோய்த் தாக்கம் காரணமாக உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவன் டெங்குக் காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

யாழ். இந்துக் கல்லூரியில் உயர்தர கணிதப் பிரிவில் கல்வி பயிலும் அரியாலையைச் சேர்ந்த செல்வராசா ஜனகன் (வயது 18) என்ற மாணவனே உயிரிழந்தவர் ஆவார்.

இவரது சடலம் பிரரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X